News December 30, 2025
பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பள்ளி திறக்கும் முதல்நாளிலேயே மாணவர்களுக்கு 3-ம் பருவ புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலக குடோன்களில் இருந்து பள்ளி வாரியாக புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு புத்தகங்கள் சென்றதும், ஸ்டாக் வந்துவிட்டது என எமிஸ் தளத்தில் பதிவு செய்யவும், பற்றாக்குறை இருந்தால் உடனே தெரிவிக்கவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
தங்கம் விலை.. HAPPY NEWS

இந்த வார தொடக்கம் முதலே அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ₹4,640 குறைந்து ₹1,14,560-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை வெளியான நேரத்தில் இருந்த சர்வதேச சந்தை தற்போதும் சரிந்து வருகிறது. இதனால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தங்கம் வாங்க நினைப்போர் உடனே கடைகளுக்குச் செல்லலாம் என்றும் கூறுகின்றனர்.
News February 5, 2026
வாய்ப்பு கிடைத்தால் PM-ஐ மாத்திடுவேன்: தமிழ் நடிகர்

வாழ்க்கையில் Reverse ஆப்ஷன் இருந்தால் 2014-க்கு சென்று PM-ஐ மாற்றியிருப்பேன் என நடிகர் கிஷோர் பேசியுள்ளார். இதனால் இந்தியாவே மாறியிருக்கும் என்ற அவர், நாட்டில் வெறுப்புணர்வு அதிகரிப்பதாகவும், இப்படியே சென்றால் இதை மாற்ற பல ஆண்டுகள் ஆகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பை முதலீடாக வைத்து ஆட்சியமைப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அன்பு இல்லையென்றால் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
News February 5, 2026
விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை

திமுக, அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக TN வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். இவர்களிடம் சங்கத்தினரின் கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளதாக கூறிய அவர், இதனை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், வணிகர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


