News May 2, 2024
பேருந்து கதவு கழன்று விழுந்து பெண் காயம்

திருச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பு பிரச்னை, அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தமருகில் வந்தபோது, அதன் தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது. இது பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது விழுந்தது. வலியில் துடித்த அவரை, சக பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 12, 2026
சங்கீதா விவாகரத்தில் திருப்பம்: விஜய்க்கு அடுத்த ஷாக்

விஜய்க்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்த சங்கீதா, நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்குமாறு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இது அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு நெருக்கடியை கொடுத்தது. இந்நிலையில், விஜய்யின் சொத்துகள் தொடர்பாக சங்கீதா மேலும் ஒரு வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அவரது முடிவுகள் விஜய் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
News March 12, 2026
Cricketer of the Year விருது பெறும் சுப்மன் கில்!

டெஸ்ட் & ODI கேப்டன் சுப்மன் கில்லுக்கு, ‘Cricketer of the Year’ விருதை BCCI வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 35-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1764 ரன்களை குவித்துள்ளார். T20 WC-க்கான அணியில் இடம் கிடைக்காத நிலையிலும், இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் 15-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
News March 12, 2026
சென்செக்ஸ் 829 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 829.29 புள்ளிகள் குறைந்து 76,034.42 புள்ளிகளாக வர்த்தகமானது. நிப்டி 227.70 புள்ளிகள் சரிந்து 23,639.15 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பேரல் கச்சா எண்ணெய் விலை $100 மேல் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறியதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் பங்குகளின் மதிப்பும் சரிவை சந்தித்தன.


