News May 2, 2024
கரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
Similar News
News September 19, 2025
கரூர்: விபத்து நடந்த உடனே CALL!

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனத்தில் அதிவேகமாக சென்றால் உயிரை இலக்க நேரிடும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இன்று வெளியிட்டனர். மேலும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்து நடந்தாலும் உடனடியாக 9498100780 (100) அல்லது (108) இந்த எண்ணிற்கு அழைக்கும் என அறிவிப்பு செய்துள்ளனர்.
News September 19, 2025
கரூர்: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

கரூர் மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News September 19, 2025
கரூர்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

கரூர் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<