News May 2, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
Similar News
News March 21, 2026
கள்ளக்குறிச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் தேர்தல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் பொது பார்வையாளர் சுச்சி தியாகி அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 18004250067 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 04151-227001, 04151-227002, 04151-227003 மற்றும் 04151-227004 என்ற தேர்தல் கட்டுபாட்டு அறை எண்களிலும் தொடர்பு தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
News March 21, 2026
ரிஷிவந்தியம்: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா திமுக?

ரிஷிவந்தியம் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இந்த கூட்டணி பலம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், கூட்டணி கட்சிகள் உள்ள நம்பிக்கையில் மட்டுமே தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
News March 21, 2026
உளுந்தூர்பேட்டையில் உடல் நசுங்கி பலி!

உளுந்தூர்பேட்டை: பூ.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (43). இளநீர் வியாபாரியான இவர், நேற்று எலவனாசூர் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே தனது பைக்கில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் வீராசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


