News December 30, 2025

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதி பரிதாப பலி

image

பழையகாயல் சேர்ந்தவர் மாரிசெல்வன் (25). இவர் கங்கை கொண்டானில் சோலார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 18, 2026

BREAKING: தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 46 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

News January 18, 2026

தூத்துக்குடி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

தூத்துக்குடி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

error: Content is protected !!