News December 30, 2025
வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யாதோருக்கு நோட்டீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 33,374 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பு பணி இன்று முதல் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி மையத்தில் அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
புதுக்கோட்டை: மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை அடுத்த அழகம்பாள்புரத்தில், வேப்பங்குடியைச் சேர்ந்த இன்பரசன் என்ற 23 வயது இளைஞர் மர்ம நபர்களால், உடலில் 7 இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு, இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் போலீசார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
News January 12, 2026
புதுகை: கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்

புதுகை மாவட்டத்தில் உங்க கனவை சொல்லுங்க திட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக துவக்கப்பட்டது. இது குறித்து ஆட்சியர் அருணா தெரிவிக்கையில், இந்த கணக்கெடுப்பு பணிக்கு 1,561 செய்யப்பட்டுள்ளனர். இதற்காக தன்னார்வலராக 978 நபர்களும் கண்காணிப்பாளராக 583 நபர்களும் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 30 குடும்பங்களுக்கு கணக்கு எடுப்பதற்கு ரூ.500 வழங்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


