News December 30, 2025

₹5,000 வரை அபராதம்.. ITR தாக்கலுக்கு நாளையே கடைசி

image

திருத்தப்பட்ட ITR செய்வதற்கு நாளையே கடைசி நாளாகும். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ITR-ல் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபட்ட விவரங்கள் இருந்தால், அதை திருத்தி நாளைக்குள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் ₹1,000 – ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, கடந்த ஆண்டை போலவே காலக்கெடுவை நீட்டிக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

தவெகவில் இருந்து விலக சிலர் முடிவு: விஜய்க்கு அதிர்ச்சி

image

தேர்தலில் ‘சீட்’ இல்லை என்ற தலைமையின் முடிவால் தவெகவில் இருந்து சில மா.செ.,க்கள் விலக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10-ம் தேதி நடந்த மா.செ.,க்கள் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு அங்கு சீட்டு இல்லை என்றால் ‘தளபதியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்’ எனக் கூறினார். இது பலரையும் அப்செட் ஆக்கியதோடு, விலகல் முடிவுக்கு தள்ளியதாக கூறப்படுகிறது.

News February 12, 2026

TTV-க்கு எதிராக திரும்பியுள்ளாரா சசிகலா?

image

விரைவில் புதிய கட்சி தொடங்கி, தவெக கூட்டணியில் சசிகலா இணையவிருப்பதாக பேசப்படுகிறது. இது தொடர்பாக சசிகலாவின் தம்பி திவாகரனும், விஜயை சந்தித்து பேசியுள்ளாராம். அத்துடன் அமமுகவை உடைக்க சசிகலா பிளான் போட்டிருக்கிறார் என்கின்றனர். இதற்காக அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்நிலையில், சசிகலா கட்சியில் இணைய பலர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

News February 12, 2026

தங்கம் விலையில் நிகழ்ந்த திடீர் மாற்றம்

image

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக மந்தநிலையில் இருந்து வந்த தங்கம் நேற்று மாலை திடீரென ஏற்றம் கண்டது. அதன் தாக்கத்தாலேயே இந்திய சந்தையில் நேற்று மாலை <<19112680>>சவரனுக்கு ₹1,520 உயர்ந்தது<<>>. இந்நிலையில், இன்று(பிப்.12) ஏறுமுகத்திலேயே தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $44 டாலர்கள் உயர்ந்து $5,060-ஐ கடந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்றும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.

error: Content is protected !!