News December 30, 2025

ராணிப்பேட்டை: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) ராணிப்பேட்டை மாவட்ட அலுவகத்தை (04172-299200) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 14, 2026

ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் கலைவிழா வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. முத்துக்கடை பேருந்து நிலையம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும். இதில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று காலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இதில் அனைத்து பொதுமக்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

ராணிப்பேட்டை: பூட்டிய வீட்டில் வாலிபர் பிணம்

image

நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் இன்று (ஜன.14) பூட்டப்பட்டிருந்த வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் இன்று இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

முதலமைச்சரை சந்தித்த ராணிப்பேட்டை அமைச்சர்

image

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி இன்று (ஜன.14) நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் உடன் ராணிப்பேட்டை மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டார்.

error: Content is protected !!