News December 30, 2025
பாரதியின் கனவு PM மோடியால் நிறைவேறுகிறது: CPR

ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி CPR உரையாற்றினார். அதில், தர்மத்தின்படி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவம் தான் நம்மை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாரதி கண்ட கனவு PM மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை அவர் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். காசி – ராமேஸ்வரம் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என்றும் கூறினார்.
Similar News
News February 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 15, மாசி 3 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News February 15, 2026
பெண்களை லட்சாதிபதியாக்கும் தேர்தல் அறிக்கை ரெடி: பாஜக

தேர்தல் நெருங்க நெருங்க EPS கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். மறுபக்கம் CM ஸ்டாலின் மகளிருக்கு ₹5,000 ஒரே பேமெண்டில் கொடுத்ததோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 உயரும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், பெண்களை லட்சாதிபதியாக்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
முகத்தை பளபளப்பாக்கும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்!

சருமத்தைப் பாதுகாக்க தாக்காளி மிகவும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரும்புள்ளிகள், எண்ணெய் பசை உள்ளிட்ட பாதிப்புகளை குறைக்க தக்காளி பேஸ் பேக் உதவுமாம். அதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு 2 (அ) 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்.


