News December 30, 2025
திமுக அரசுக்கு பயம்: அன்புமணி

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வே நடத்த இல்லையா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான தனது அறிக்கையில், சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என திமுக அரசு அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
விஜய் உடன் இணைந்த அடுத்த தலைவர்.. இபிஎஸ் அதிர்ச்சி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வேலூர் மாவட்ட Ex மா.செ.,வுமான வாசு தவெகவில் இணைந்துள்ளார். 2006 – 2010 வரை வேலூர்(கி) மா.செ.,-வாக இருந்த இவர், 2009 லோக்சபா தேர்தலில் வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். Ex அமைச்சர் KC வீரமணியின் நம்பிக்கை முகமாக இருந்த இவர், திடீரென செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் இணைந்துள்ளது EPS தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
News January 16, 2026
ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News January 16, 2026
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.


