News December 30, 2025

நடிகர் மோகன்லால் வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

image

மலையாள நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி(90) காலமானார். கொச்சி, எலமாக்கரா பகுதியில் உள்ள இல்லத்தில் தனது கடைசி காலத்தை கழித்துவந்த அவர், நரம்பியல் சார்ந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சாந்தகுமாரி உயிரிழந்துள்ளார். தாயார் இறந்த செய்தியறிந்து நடிகர் மோகன்லால் அங்கு விரைந்துள்ளார்.

Similar News

News February 11, 2026

திமுக வேண்டாம்: புதிய காங்., மாவட்ட தலைவர்கள் முழக்கம்

image

திமுக-காங்., இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்., மாவட்ட தலைவர்களின் 90% பேர், DMK கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என மேலிடத் தலைவர்களிடம் கூறியுள்ளார்களாம். தற்போதைய சூழலில் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், கணிசமான தொகுதியில் போட்டியிடலாம், வாக்கு வங்கியும் அதிகரிக்கும் எனவும் கருத்தை பதிவு செய்துள்ளார்களாம்.

News February 11, 2026

விவேகானந்தரின் பொன்மொழிகள்

image

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம் *அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

News February 11, 2026

நேரடி அரசியலில் நுழைந்த ஸ்டாலின் மருமகன் சபரீசன்

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், வெளியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்த நிலையில் தற்போது நேரடியாக அரசியலில் களமிறங்கி இருக்கிறார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் சபரீசன் பங்கேற்றுள்ளார். கட்சியினருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல் வேட்பாளர் தேர்விலும் சபரீசன் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!