News December 30, 2025
JUST IN: திருத்தணி விவகாரம்: பொங்கி எழுந்த விஜய்

திருத்தணி வடமாநில இளைஞர் பட்டாக் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ’சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது’ என கடுமையாக சாடினார். மேலும் எஞ்சியிருக்கும் அட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
திருவள்ளூர்: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

கடம்பத்தூர் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் அரிபாபு. இவரது மகள் ஹேமதர்ஷினி(16). இவர், பேரம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் வேலை பார்க்க சொல்லி தாய் கண்டித்ததால், மனவேதனை அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று (பிப்.09) காலை பைக்கில் திருவேற்காடு பகுதியைச் சார்ந்த சேகர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழ விழுந்த போது அருகில் வந்த சொகுசு பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயில் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க


