News December 30, 2025
4 ஆண்டுகளில் 48,451 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 48,451 பயனாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
கள்ளக்குறிச்சியில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் மற்றும் மூங்கில்பாடி துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சர்க்கரை ஆலை பகுதி, நீலமங்கலம், மேல்நாரியப்பனூர், திம்மாபுரம், தென்பொன்பரப்பி, எடுத்தவாய்நத்தம், கரடிசித்தூர், அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
கள்ளக்குறிச்சியில் 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் திருச்சி வேலூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 7, 2026
தவெக தலைவர் விஜயை சாடிய எம்பி ரவிக்குமார்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று விசிக எம்பி ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர். அப்போது, பேசிய எம்பி ரவிக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவின் பிடியில் சிக்கித் தவிக்கிறார் என பேசினார்.


