News December 30, 2025

நாளையே கடைசி.. பான் கார்டு வேலை செய்யாது!

image

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

Similar News

News January 7, 2026

திருப்பத்தூர்: தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி இன்று (ஜன.06) அறிக்கை வெளியிட்டார். அதில் அனைத்து உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை ஜன.07 அரையாண்டு பொதுத் தேர்வுக்கான தேர்ச்சி மேல் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்: EPS

image

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என EPS கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அதிமுகவுக்கு சிலர் அவப்பெயரை ஏற்படுத்த முயல்வதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் உரியநேரத்தில் தரப்படும் என்றும், நேர்காணலின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளார்.

News January 7, 2026

PM மோடி குறித்த கருத்து.. மாணவர்கள் மீது நடவடிக்கை

image

டெல்லி JNU பல்கலை., மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது PM மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு FIR பதிவு செய்யப்படும் என பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள் கண்டுபிடிப்புகளுக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்புகளை உருவாக்கும் ஆய்வகமாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!