News December 30, 2025

தூத்துக்குடி: பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை!

image

கயத்தாறு பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (55). இவர் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண்ணின் சகோதரி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து, முருகேசனை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

தூத்துக்குடி: பைக் மீது பஸ் மோதி பரிதாப பலி

image

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 12, 2026

தூத்துக்குடி: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News January 12, 2026

தூத்துக்குடி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in <<>>என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!