News December 30, 2025
EPS-க்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

சிறுவர்கள் கையில் கூட போதைப்பொருள் இருப்பதாக <<18703918>>EPS<<>> விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சு., EPS முதல்வராக இருந்தபோது தான் TN-ல் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். எங்கேயாவது விற்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சியினர் கூறினால், நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய அப்டேட்

மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதனிடையே, விதிகளின்படி 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இதில் பயன்பெறும்போது, IT தாக்கல் செய்தாலும், அதிகக் கடனில் வாழும் தங்களையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், திட்ட விதிகள், பலகட்ட பரிசீலனைகளுக்கு பிறகே தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
வடகொரியாவின் அடுத்த தலைவர் இவர் தானா?

வட கொரியாவின் அடுத்த தலைவராக கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ பதவியேற்கலாம் என்று தென் கொரிய உளவுத்துறை(NIS) தெரிவித்துள்ளது. மகளை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க கிம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய ராணுவ சுற்றுப்பயணங்களில் கிம் ஜு ஏ பங்கேற்றதும், கொள்கை முடிவுகளில் அவரது கருத்துகளும் இதை வலுப்படுத்துகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
News February 12, 2026
1,00,00,00,00,000 ரூபாய் சரிந்தது.. அம்மாடியோவ்

2020-க்கு பிறகு முதல்முறையாக TCS-ன் சந்தை மதிப்பு ₹10 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. பங்கு சந்தையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி 12-ல் சந்தை மதிப்பு 5.5% ஆக சரிந்தது. <<19050261>>AI-ன் தாக்கத்தால்<<>> சாப்ட்வேர் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த கவலையில் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை திரும்ப பெற்று வருகின்றனர். இதனால், ஐடி துறையில் வேலைவாய்ப்பு, பிசினஸ் பாதிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.


