News December 30, 2025
இந்த படத்தை பார்த்து அழுதேன்: இயக்குநர் சங்கர்

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் அப்படத்தை பார்த்த இயக்குநர் சங்கர், பல காட்சிகளில் அழுததாக தெரிவித்துள்ளார். விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டிய அவர், படம் முடிந்த பிறகும் அதன் கதாபாத்திரங்களும், நடிப்பும் தன் மனதில் நிற்பதாகவும் கூறியுள்ளார். மேலும், படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்ற கருத்து மிகவும் வலிமையாக இருந்ததாகவும் மனதார பாராட்டியுள்ளார்.
Similar News
News February 17, 2026
T20 WC: சூப்பர் 8-ல் இந்தியா மோதும் அணிகள்!

2026 T20 WC-ல் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன. சூப்பர் 8-ல் குரூப் பிரிவில் உள்ள இந்திய அணி, பிப்.22-ல் தென்னாப்பிரிக்காவையும், பிப்.26-ல் ஜிம்பாப்வேயையும், மார்ச் 1-ல் வெஸ்ட் இண்டீஸையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள 3 அணிகளும் வலுவான நிலையில் உள்ளதால், இந்தியாவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
News February 17, 2026
ஈரானின் ராணுவ பயிற்சியால் பதற்றம்!

அமெரிக்காவுடனான அணு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஈரான் ஹோர்மூஸ் கால்வாயில் நேரடி ஏவுகணைகளை வீசி ராணுவ பயிற்சி நடத்தியுள்ளது. இது ஒருபக்கம், இருநாடுகளிடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும். மறுபக்கம், உலகின் 20% எண்ணெய் கடந்து செல்லும் முக்கியமான சர்வதேச வர்த்தக பாதைகளில் ஒன்றாக ஹார்முஸ் கால்வாய் உள்ளதால், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
News February 17, 2026
தெறி ரீ-ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் ‘தெறி’ படம் பிப்.27-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே சில புது படங்களின் ரிலீஸால் 2 முறை ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் நிலையில், இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் பெஸ்ட் தியேட்டர் மொமண்ட் எது?


