News December 30, 2025
குமரி: காரில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

குமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது சம்பந்தமாக வட்ட வழங்கல் அதிகாரிகள் வாவறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். சோதனையின் போது நிற்காமல் சென்ற சொகுசு காரை துரத்தி சோதனை செய்ததில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
குமரி: FIR பெறுவதில் சிக்கலா.? SP புதிய தகவல்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், FIR உங்கள் உரிமை குறித்த போஸ்டர் அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புகார்தாரருக்கு FIR நகலை இலவசமாக பெரும் உரிமை இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 7708239100 என்ற பப்ளிக் ஃபீடுபேக் சென்டர் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
News February 3, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 3, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


