News May 2, 2024

நீலகிரி வாலிபர் இத்தாலியில் மர்ம சாவு

image

பந்தலூர் ஆனைகட்டியை சேர்ந்தவர்கள் வில்சன்-தங்கமா தம்பதி. இவர்களின் மகன் சஜீஷ் (34). இவர் 2018 முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாததால் இத்தாலியில் உள்ள சஜீஷின் உறவினர் உதவியுடன் விசாரித்தபோது அவர் உயிரிழந்ததும், அவரது உடல் இத்தாலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சஜீஷ் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News January 17, 2026

நீலகிரி மக்களே உடனே செக் செய்யவும்!

image

நீலகிரி மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

டெல்லியில் ஜொலித்த கோத்தகிரி சிறுமி

image

டெல்லியில் நடைபெற்ற 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோத்தகிரியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பிரணிதா (12) இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த அந்த மாணவி சொந்த ஊர் திரும்பியபோது, ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

News January 17, 2026

பந்தலூர் அருகே அதிரடி: இருவர் கைது

image

பந்தலூர் அருகே சேரம்பாடி போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சேரங்கோடு சோதனைச் சாவடியைச் சேர்ந்த தங்கையா (63) என்பவரிடமிருந்து 80 மதுபாட்டில்களும், படச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி (39) என்பவரிடமிருந்து 22 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 102 மதுபாட்டில்களைக் கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!