News December 30, 2025
தவெக நிர்வாகிகளிடம் CBI கேட்டது என்ன?

கரூர் சம்பவம் தொடர்பாக <<18710271>>2-வது நாளாக<<>> TVK நிர்வாகிகளை CBI விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, விஜய் வருகையில் தாமதம் இருந்ததா? என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? கூடுதலாக எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தார்கள்? TVK பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? திட்டமிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடந்ததா? உள்ளிட்ட கேள்விகளை பல கேட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News February 10, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் சவரனுக்கு ₹3,840 குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், நேற்று முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.10) காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $45 குறைந்து $5,011-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை இன்று குறைய வாய்ப்புள்ளது.
News February 10, 2026
பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: காங்.,

மக்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய உயரிய அமைப்பாக உள்ள நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகம் கட்டுப்படுத்துவதாக கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டினார். மாபெரும் தொகைகளை சேகரித்த மர்மமான PM CARES நிதி தொடர்பான கேள்விகளுக்கு, அவையிலேயே பிரதமர் பதிலளிக்க வேண்டும். இந்த நிதியின் விவரங்கள் குறித்து பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்… திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவோ கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. நெல்லை, குமரி பகுதிகளில் வலுவாக இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R.தனபாலன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


