News December 30, 2025
புதுகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

புதுகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை பெற நாளை கடைசி நாளாகும். முதுகலை பாலிடெக்னிக் போன்ற படிப்பு பயிலும் முன்றாண்டு இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி கல்வியில் உதவி தொகை பெற www.://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
புதுகை: விபரீதத்தில் முடிந்த கணவன் மனைவி பிரச்னை!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அடுத்த பாலன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (45). இவர் நேற்று மது போதையில் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, பாலன் நகரில் உள்ள அவரது வீட்டின் மேற்கூறையில் உள்ள மர உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
புதுகை: குளத்தில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி!

திருக்கோகர்ணம் அருகே மாறாயப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தையை நேற்று காலை முதல் காணவில்லை என தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள களரிக் குளத்தில் குழந்தையின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
புதுகை: புத்தாண்டு – காவல்துறை கடும் எச்சரிக்கை!

புதுகை மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு விழா கொண்டாட்டம் என்ற பெயரில் DJ பார்ட்டி ஏற்பாடு செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக ஒளி பட்டாசு வெடித்தல், இருசக்கர வாகனங்களில் ரேஸ் செய்தல் ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலில் குளிக்கவும், படகில் அழைத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என SP அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.


