News December 30, 2025

ஆர்.எஸ்.புரத்தில் திறந்து வைத்தார் DCM உதயநிதி ஸ்டாலின்

image

ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. இது 6,500 சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாட்டு வீரர்களுக்கு உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News

News January 15, 2026

காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகன் ஜெகன் (17). இவர் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கீழே குதித்தார். பின்னர் படுகாயம் அடைந்த அவர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 15, 2026

மருதமலையில் இதற்கு தடை!

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு காரில் மலை மேல் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் மலைப்படிகள் மற்றும் கோயில் பேருந்து வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். (இத்தகவலை SHARE பண்ணுங்க)

News January 15, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!