News December 30, 2025
கில்லின் ரன்வேட்டையை முந்துவாரா ஸ்மிருதி மந்தனா?

இந்திய ஆடவர் & மகளிர் அணிகளை சேர்த்து, 2025-ல் அதிக ரன்கள் குவித்தவராக சுப்மன் கில் (1,764 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 1,703 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். கில்லை விட ஸ்மிருதி மந்தனா 61 ரன்கள் மட்டுமே பின்தங்கி இருக்கிறார். இன்று இலங்கைக்கு எதிரான கடைசி T20I போட்டி நடைபெற உள்ள நிலையில், கில்லை முந்துவாரா ஸ்மிருதி மந்தனா?
Similar News
News February 3, 2026
ராகுல் நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்: கோயல்

அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். ராகுல் போன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்துவதாகவும், முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான அழுத்தங்களால் வணிக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் PM மோடி அடிபணிந்துவிட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News February 3, 2026
இனி குழந்தைகள் முன் இதை செய்யுங்கள்

ஆளாளுக்கு ஒரு போன் வைத்திருப்பதால், வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இல்லை. இப்படி செய்தால் உங்கள் குழந்தைகளும் அதையேதான் செய்வர். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு முன் கணவன்- மனைவி இருவரும் அமர்ந்து அன்றைய நாளை பற்றி டிஸ்கஸ் பண்ணுங்க. ஜோக் அடித்து சிரித்து மகிழ்ச்சியாக இருங்க. இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலை நன்றாக இருப்பதோடு, அவர்கள் உங்களுடன் பிணைப்பாகவும் இருப்பர். SHARE.
News February 3, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. வந்தாச்சு அப்டேட்

புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர உதவித் தொகை, இம்மாதம் முதல் <<19033682>>₹2,500<<>> ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழகத்திலும் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஏற்கெனவே CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், மார்ச்சில் வெளியாகும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


