News May 2, 2024
ஏற்காட்டில் தயாராகும் 30,000 மலர் செடிகள்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் 2 மாதத்திற்கு முன்பே 30 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் பூக்கள் பூத்து கோடை விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பல வகையான பூச்செடிகளில் பூக்கள் மலர தொடங்கி உள்ளன. இந்த செடிகளை சுற்றுலா பயணிகள் நேற்று ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.
Similar News
News March 5, 2026
சேலம் கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!

2026-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 11 ரெகுலர் தாசில்தார்கள் உட்பட 45 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிருந்தாதேவி பிறப்பித்துள்ளார். இதில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளின் தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், ஊரக வளர்ச்சித் துறையில் 210 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இருவருக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 4, 2026
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 04.03.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக அணுகலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0427-2273100 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


