News December 30, 2025
தருமபுரி: ரயில்வேயில் ரூ.44,900 சம்பளத்துடன் வேலை!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். கடைசி தேதி: ஜனவரி-29<
Similar News
News January 1, 2026
தருமபுரி: எமனாய் மாறிய நாய்- முதியவர் பரிதாப பலி!

கம்பைநல்லூர் அருகே எலவடையைச் சேர்ந்த விவசாயி மோகன் (52), மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அம்மாபேட்டை பிரிவு ரோடு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 1, 2026
தருமபுரி: தீப்பிடித்து எரிந்த வீடு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தேவரெட்டியூரைச் சேர்ந்த தொழிலாளி சின்னராஜின் ஓட்டு வீடு, மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 1, 2026
தர்மபுரி மாவட்டத்தில் 800 போலீசார் குவிப்பு

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.


