News December 30, 2025
கம்பீரே தொடர்வார்: ராஜீவ் சுக்லா

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு <<18695088>>தனி பயிற்சியாளரை<<>> நியமிக்க BCCI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை, அதாவது 2027 வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார் என BCCI துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News January 2, 2026
விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுத்த உதயநிதி

2026 தேர்தலில், DMK-TVK இடையே தான் போட்டி என விஜய் கூறியிருந்தார். விழா ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனாவும் அரையிறுதியில் ADMK-ஐ தோற்கடித்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவையே பார்ப்பதாக DCM உதயநிதி பேசியுள்ளார். ADMK பலவீனமாக இருந்தாலும், தேர்தலில் அக்கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி எனக் கூறி விஜய்யின் பேச்சுக்கு மறைமுகமாக உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
News January 2, 2026
அரசியல் கட்சிகளுக்கு சவாலான 2026 புத்தாண்டு

மலர்ந்துள்ள புத்தாண்டு அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில், சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க DMK முனைப்பு காட்டுகிறது, மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏற ADMK முயற்சிக்கிறது. வாகை சூடும் வரலாறு திரும்பும் என TVK நம்புகிறது. NTK-வும் தீவிரமாக களமாடுகிறது. வெற்றி, தோல்வியை பொறுத்தே கட்சிகளின் எதிர்காலம் அமையும். எனவே 2026 அரசியல் கட்சிகளுக்கு சவாலான ஆண்டாகும்.
News January 2, 2026
ஏன் இதை ‘தேன் நகரம்’ என்று அழைக்கின்றனர் தெரியுமா?

பாரம்பரிய மற்றும் நவீன முறைகளில் தேன் உற்பத்திக்கு பெயர் பெற்ற, உத்தரபிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச், ‘தேன் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஊர், பழத்தோட்டங்கள் மற்றும் மலர் தோட்டங்களுடன் தேனீக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் ஐரோப்பா, வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


