News December 30, 2025

கரூர்: ரயில் சக்கரத்தில் சிக்கி பலி

image

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்தர் முருகேசன். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மங்களூரு – புதுச்சேரி விரைவு ரயிலில் கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Similar News

News January 15, 2026

கிருஷ்ணராயபுரத்தில் வசமாக சிக்கிய நபர்!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாணிக்கம் (52). இவர் அப்பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து உள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற மாணிக்கம் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News January 15, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான சப்ளையர்கள் (Suppliers) வரிசையில் சேர நெசவாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 9750044550 என்ற எண்ணில் சரக கைத்தறி உதவி இயக்குநரைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

கரூர் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான சப்ளையர்கள் வரிசையில் சேர நெசவாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு 9750044550 என்ற எண்ணில் சரக கைத்தறி உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!