News December 30, 2025

திருவாரூர்: வங்கி தொகை உரியவர்களிடம் ஒப்படைப்பு

image

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள வைப்புத்தொகைகளை தீர்வு கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைக்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், அவ்வாறு உரிமை கோரப்படாமல் இருந்து பணத்தினை விதிகளின் படி உரிய நபர்களிடம் ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News

News January 14, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

தாயகம் திரும்பியோர் கடன் விவரம் தெரிவிக்க ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள் மீது உள்ள கடனை நீக்கிவிட்டு திரும்ப ஒப்படைக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களுடன் உடனே கலெக்டர் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தை அணுகுமாறு” தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

திருவாரூர்: நோய் வராமல் காக்கும் அம்மன்!

image

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!