News December 30, 2025

சென்னையில் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளத்தில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

சென்னையில் போலி மருத்துவர்கள்- உஷார்!

image

சென்னை அண்ணா நகர் முடி மாற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரை சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News February 11, 2026

சென்னை: விபத்தில் காதலன் பலி; தூக்கில் தொங்கிய காதலி!

image

சென்னை அயனாவரம் சோலையம்மன் தெருவைச் சேர்ந்த சுப்பு சவு மியா(20). இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சுப்பு சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(22) என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும் அவர் ரயில் விபத்தில் உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

News February 11, 2026

திருவொற்றியூர்: ரயிலில் அடிபட்ட வாலிபருக்கு தீவிர சிகிச்சை

image

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!