News May 2, 2024

அரூர்: இளைஞர்கள் அமைத்த தெருவிளக்கு

image

அரூர் அருகே உள்ள சோரியம்பட்டி புதூர் மெயின் ரோட்டில் தெரு மின்விளக்கு அமைத்து தர வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மோப்பிரிபட்டி பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்‌.
ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று(மே 1) அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு மின்விளக்கு அமைத்துள்ளனர்.

Similar News

News August 25, 2025

தருமபுரி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

தர்மபுரி மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

image

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511425>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

புகார் எண் 104ன் சேவைகள்

image

104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!