News December 30, 2025

திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட) 2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் 3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு 4) இலவச ஆம்புலன்ஸ் வசதி 5) இலவச தங்குமிடம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

திருப்பத்தூர்: பொங்கல் பரிசு வரலையா..?

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

திருப்பத்தூர்: தடகள வீரருக்கு குடியரசு தின விழா அழைப்பு

image

ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் டி.கே.விஷால். தடகள வீரரான இவருக்கு இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பிதழ் வந்துள்ளது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் குடியரசு விழாவில் கலந்துகொள்ள வாலிபருக்கு கிடைத்த வாய்பை குறித்து அப்பகுதி மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர்க்கு பெருமை சேர்ந்த மாணவனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

News January 13, 2026

திருப்பத்தூரில் டாஸ்மாக் இயங்காது!

image

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26 (குடியரசு தினம்) தேதிகளில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!