News December 30, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

image

கருஷ்ணகிரி மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் ஷாக்; ரோட்டில் கத்தியோடு நின்ற நபர்!

image

போச்சம்பள்ளி அடுத்த மடத்தனுர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (61). இவர் நேற்று (ஜன.26) மாலை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கீழ் மைலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (46) வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.5,100 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

image

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

கிருஷ்ணகிரி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

கிருஷ்ணகிரி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT!

error: Content is protected !!