News December 30, 2025

மதுரை அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

image

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் ஜோதி முருகன் 26. பொறியாளரான இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

image

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.

News January 13, 2026

மதுரை: இனி Phone மூலம்.. ரேஷன் கார்டு APPLY..

image

மதுரை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக் செய்து <<>>செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

மதுரை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!