News December 30, 2025

புதுகை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

Similar News

News January 17, 2026

புதுகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

புதுகை: புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.16) புதுகை நகர்ப்பகுதி, வல்லத்திராக்கோட்டை, வெள்ளனூர், வட காடு, பனையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News January 17, 2026

புதுகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!