News December 30, 2025
தூத்துக்குடி: மூச்சுத் திணறலால் 2 பெண்கள் பலி

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வ சுந்தரி (65) நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல, பூபால்ராயபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (48) மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இறந்துள்ளார். இதுபற்றி தென்பாகம் மற்றும் வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
தூத்துக்குடி: அரிவாளுடன் பிரபல ரவுடி கைது

முறப்பநாடு போலீசார் நேற்று மணக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பார்வதி நாதன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் மிகப்பெரிய அரிவாள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
தூத்துக்குடி: ரகசிய தகவலால் 13 பேர் கூண்டோடு கைது

குலசை காவல்ஆய்வாளர் பிரபு பாஸ்கர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த 13 நபர்கள் சேர்ந்து சட்டவிரோதமாக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து. 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 3,67,000 ரொக்கம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார்.
News January 15, 2026
தூத்துக்குடி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi’ சொல்லுங்க

தூத்துக்குடி மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும்.இதனை ஷேர் பண்ணுங்க


