News December 30, 2025
கடலூரில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 307 குட்கா போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 403 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,224 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 4, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி பலி

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்த ஞான ஜோதி (63) என்பவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம்- மேட்டுக்குப்பம் சாலையில் சென்றபோது, திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஞானஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சபரி மகள் இமையா (14). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இமையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த இமையா நேற்று மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.