News December 30, 2025

சிவகங்கை: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

இளையான்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் வீட்டில் இருந்த 11 வயது சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, கொம்பாடி மதுரையை சேர்ந்த கார்த்திக், 11வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Similar News

News January 12, 2026

சிவகங்கை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லேயே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News January 12, 2026

சிவகங்கை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்..

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 12, 2026

சிவகங்கையில் பொங்கலை முன்னிட்டு 2 நாள் கலை நிகழ்ச்சி

image

சிவகங்கை மாவட்டம், மதுரை மண்டலக் கலை பண்காட்டு மையம் சார்பாக, வருகின்ற 16.1.2026 மற்றும் 17.1.2026 ஆகிய இரண்டு நாட்கள், சிவகங்கை நகராட்சி பகுதியிலுள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளித்து, பொங்கல் விடுமுறை நாட்களை கொண்டாடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!