News December 30, 2025
திருவாரூர்: லாரி மோதி ஒருவர் பலி

திருவாரூர், நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்வெண்ணி பகுதியில், திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில், நேற்று (டிச.29) காலை 8 மணி அளவில் லாரி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தற்போது நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
திருவாரூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

திருவாரூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
திருவாரூர்: சுடுகாட்டில் சடலமாக கிடந்த முதியவர்

கோட்டூர் அருகே மழைவராயநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழயாக சென்ற பொதுமக்கள் கோட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி, இதுகுறித்து வழக்கு பதிந்து சடலமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
திருவாரூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள் மீது உள்ள கடனை நீக்கிவிட்டு திரும்ப ஒப்படைக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களுடன் உடனே ஆட்சியர் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தை அணுகலாம்.” என அறிவித்துள்ளார்.


