News December 30, 2025
ராமநாதபுரம்: துணை ஜனாதிபதி இன்று வருகை

ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். பாதுகாப்பு காரணம் கருதி ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மதியம் 3:00மணிக்கு வந்திறங்கி, பின் காரில் ராமேஸ்வரம் வர உள்ளார்.1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
Similar News
News January 17, 2026
ராம்நாடு: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

ராம்நாடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 17, 2026
ராமநாதபுரம்: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

ராம்நாடு மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.
News January 17, 2026
ராம்நாடு: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி!

முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் (24). இவர் நேற்று முதுகுளத்தூரில் இருந்து உத்திரகோசமங்கை கோயிலுக்கு சென்றுள்ளார். தேரிருவேலி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் திலீப் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த திலீப் மதுரை தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், திலீப் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேரிருவேலி போலீசார் விசாரனை.


