News December 30, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.
Similar News
News January 13, 2026
’பராசக்தி’ பார்த்து அழுதேன்: மன்சூர் அலிகான்

’பராசக்தி’ திரைப்படம் ஹிந்தி திணிப்பை பற்றி இளைஞர்களுக்கு தெரியப்படுத்த உதவியாக இருப்பதாக மன்சூர் அலிகான் பேசியுள்ளார். இப்படத்தில் அனைத்தையும் காட்டாமல் வெறும் 10% தான் காட்டியிருக்கிறார்கள் என்ற அவர், அதற்கே சென்சார் போர்டு ஏகப்பட்ட கெடுபிடி செய்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் இப்படத்தை 5 முறைக்கு மேல் பார்த்து அழுதுவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
ராமதாஸுக்கு முட்டுக்கட்டை போடும் அன்புமணி

திமுக (அ) தவெக பக்கம் ராமதாஸ் கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், NDA கூட்டணி அவரிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்பட்டது. ஆனால், இதில் அன்புமணியால் இழுபறி இருந்து வருகிறதாம். ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்திலும் குழப்பம் வரும் என கூறி, அவர் முட்டுக்கட்டை போடுவதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News January 13, 2026
பொங்கல் பரிசு.. சோகச் செய்தி வந்தது

பொங்கல் பரிசுத் தொகையை அனைவரும் சந்தோஷமாக வாங்கிவரும் போது, ஒரு குடும்பத்திற்கு மட்டும் அது சோகத்தில் முடிந்துள்ளது. கோவை நாகராஜபுரம் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வீரம்மாள்(87) சாலையில் மயங்கியுள்ளார். இவரை ஹாஸ்பிடலில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படியான சூழலை தவிர்க்க முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ₹3000 வழங்கலாமே எனக் கோரிக்கை வலுத்துள்ளது.


