News May 2, 2024
மதுபாட்டில் திரும்பப் பெற்றதன் மூலம் ₹306 கோடி வசூல்!

மதுபாட்டில் பைபேக் திட்டத்தின் மூலம் ₹306 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுபானங்கள் விற்கும்போது, கூடுதலாக பெற்ற ₹10 மூலம் வசூலான ₹306 கோடியில் ₹297 கோடி மதுபிரியர்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹9 கோடி தனிக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 4,829 மதுக்கடைகளில் 4,397இல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Similar News
News February 3, 2026
பெரம்பலூர்: இன்று ரோந்து பணி காவலர் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.02) இரவு 10 முதல் இன்று (பிப்.03) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
News February 3, 2026
USA-வுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை: ஈரான் முடிவு

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை தொடங்க ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், அது ஒரு பிராந்தியப் போராக வெடிக்கும் என்று ஈரானின் உச்ச தலைவர் கொமேனி நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்காவும் ஈரானும் ஓர் ஒப்பந்தத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
வரியை குறைத்த டிரம்புக்கு நன்றி: PM மோடி

<<19035190>>இந்திய பொருள்கள்<<>> மீதான வரியை 18% ஆக குறைத்த அதிபர் டிரம்புக்கு PM மோடி நன்றி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், உலகின் இரண்டு பெரிய பொருளாதார & ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும் போது மக்கள் பயனடைகின்றனர் என்றும், மகத்தான வாய்ப்புகள் உருவாகின்றன எனவும் கூறியுள்ளார். மேலும், உலகளவில் அமைதி நிலவுவதற்காக டிரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


