News May 2, 2024
கவிதா ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சிபிஐ கைதுக்கு எதிராக, ஜாமின் கோரி பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 6ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. மதுபான முறைகேடு தொடர்பாக கவிதாவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்தது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிபிஐ வழக்கில் ஜாமின் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 6ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது
Similar News
News August 29, 2025
BREAKING: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
News August 29, 2025
கோயில் நிதியில் கல்விக்கு செலவிடுவதில் தவறில்லை: SC

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் காலேஜ் கட்டுவதற்கு எதிராக T.R.ரமேஷ் என்பவர் SC-ல் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய SC, மயிலை கோயில் நிலத்தில் காலேஜ் கட்டுவதில் தவறில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு பாஜக, இந்து முன்னணி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன.
News August 29, 2025
ஜாக்கி சானை இயக்க ஆசை: பிரதீப் ரங்கநாதன்

‘LIK’ பட டீஸருக்கு கிடைத்த வரவேற்பில் உற்சாகத்தின் உச்சியில் உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதனிடையே அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜாக்கி சானை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குவதே தனது கனவு என தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட நெட்டிசன்கள், ‘அப்போ அவரும் ரொமான்டிக் காமெடி பண்ணுவாரா’ என கேட்டு வருகின்றனர். ‘DUDE’ படமும் ரிலீஸ் லிஸ்ட்டில் உள்ளதால், பிரதீப் புரமோஷன் பணிகளில் பிஸியாகியுள்ளார்.