News December 30, 2025
ஹமாஸ், ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

காஸாவில் அமைதி நிலவுவதற்கு ஆயுத பயன்பாட்டை ஹமாஸ் அமைப்பினர் கைவிட வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதை ஏற்க மறுத்தால் ஹமாஸ் அமைப்பினர் நரகத்திற்கு செல்ல நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். நெதன்யாகு உடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய டிரம்ப், அணுசக்தி திட்டங்களை ஈரான் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
தோல்வியில் முடிந்ததா ராமதாஸ் முயற்சி?

ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் சேர்க்கும் எண்ணத்தை திமுக, அதிமுக இரண்டுமே ஏறக்குறைய நிறுத்திவிட்டன. இந்நிலையில் தவெக மற்றும் நாதகவிடம், நாம் மூவரும் ஏன் கூட்டணி சேரக்கூடாது என ராமதாஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் உஷாரான நாதக தரப்போ, அண்ணன் சீமான் பிப்.21-ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். அதே வேகத்தில் பிரசாரத்துக்குக் கிளம்புகிறார் என சொல்லி அவர்களும் கதவை அடைத்துவிட்டார்களாம்.
News February 9, 2026
விஜய், விஜய்னு சொன்னால், CM ஆசை வந்துடுமா? வேல்முருகன்

துக்க வீட்டை சேர்ந்தவர்களை வீட்டுக்கு அழைத்துதான் எம்ஜிஆர் அரசியல் செய்தாரா என விஜய்க்கு வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களும், இளைஞர்களும் உங்கள் பாட்டுக்கு ஆடி விஜய், விஜய்னு சொன்னால், உங்களுக்கு CM ஆசை வந்துவிடுமா என்றும், மிசா காலத்தில் ஜெயிலில் ரத்தம் சிந்திய ஸ்டாலினை முதலமைச்சர் சார், என்ன Uncle என கூப்பிடுகிறார்; நக்கல் நையாண்டி செய்வதை விஜய் நிறுத்த வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
News February 9, 2026
ஆவாரம் பூ டீ குடிச்சிப் பாருங்களேன்!

சுடுநீரில் ஆவாரம் பூக்களை போட்டு கொதிக்கவிட்டு, வடிகட்டி பருகலாம். அல்லது அதன் பொடியை வெந்நீரில் போட்டு குடிக்கலாம். சர்க்கரை சேர்க்கக்கூடாது. இது செரிமான பிரச்னையை நீக்கும் *உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும் *முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் *சரும சுருக்கங்கள் உள்ளிட்டவற்றை குறைத்து சரும நிறத்தை மேம்படுத்தும் *ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


