News December 30, 2025

TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

image

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Similar News

News February 12, 2026

2 வாரத்தில் வெள்ளி விலை தலைகீழாக குறைந்தது!

image

இந்த வாரம் தொடங்கியது முதலே வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ₹300 ஆகவே உள்ளது. வரும் நாள்களில் விலை ஏறுமா, குறையுமா என்ற குழப்பத்தில் மக்களும், நடுக்கத்தில் முதலீட்டாளர்களும் உள்ளனர். காரணம் கடந்த 29-ம் தேதி 1 கிராம் வெள்ளி ₹425-க்கு விற்பனையானது. ஆனால், 15 நாள்களில் விலை தலைகீழாக மாறி தற்போது ₹300 என்ற நிலையில் உள்ளது. இதுகுறித்த விசாரித்தபோது தற்போதைக்கு பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்கின்றனர்.

News February 12, 2026

BREAKING: தேமுதிக கூட்டணி.. பிரேமலதா புதிதாக அறிவித்தார்

image

தேமுதிக, இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் விரும்பும் அணியில் தேமுதிக இடம் பெறும், அதுகுறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமைச்சர் எ.வ.வேலு, EPS, நயினார் கூறியதை சுட்டிக் காட்டினார்.

News February 12, 2026

2 காதல்.. 2 முறை ஓடிப்போன பெண்!

image

உ.பி., அலிகர் பகுதியை சேர்ந்த சப்னா தேவிக்கு, தன் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட ராகுலுடன் காதல் மலர, அவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 10 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இதுவே பெரும் விவாதத்திற்குள்ளான நிலையில், தற்போது சப்னா தேவி ராகுலின் சகோதரி கணவருடன் ஓடிப்போய் விட்டாராம். ₹2 லட்சம் & நகைகளையும் அவர் எடுத்து சென்றதாக ராகுல் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த காதலை பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!