News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 5, 2026
விழுப்புரம்: தறிகெட்டு ஓடிய பைக் – ஒருவர் பரிதாப பலி

கிளியனூர் அருகே, திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஹரீஷ் கர்ணா என்ற இளைஞர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர்கள் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
விழுப்புரம்: உடைந்து கிடந்த கதவு – காத்திருந்த பேரதிர்ச்சி!

விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் வெங்கடேசன், குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.75 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்த் வருகின்றனர்.
News January 5, 2026
விழுப்புரம்: தலைகுப்பற விழுந்த ஆமினி பேருந்து!

சென்னையிலிருந்து கரூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை பாதூர் அருகே நேற்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஜியாவுதீன் (25) உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


