News December 30, 2025
புதுவை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை சமர்பிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள்
விபரங்களை சமர்பிக்க கல்விதுறை உத்தரவு. புதுவை கல்வித்துறை
இணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தகுதி பெறாத ஆசிரியர்கள் விபரங்களை வரும் 31-ந் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில், மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!
News January 15, 2026
புதுவை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
புதுச்சேரி: போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுவையில் சார்லஸ் மார்ட்டின் எல்ஜேகே என்ற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தல் அரசியல் பணிகளை செய்து வருகிறார். அவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அவரை சீண்டுவது போல முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்களின் சார்பில் “லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி வேண்டுவோர், ஆட்சிக்கு வர நினைப்போர் உள்ளே அனுமதி இல்லை” என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


