News December 30, 2025

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

Similar News

News January 14, 2026

கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக் <<>>(அ) கரூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 14, 2026

கரூரில் ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 14, 2026

கரூர்: வாங்கல் சாலையில் விபரீதம்!

image

கரூர் மாவட்டம், அருகே வாங்கல் சாலையில், வரதன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலை மற்றும் கால் பகுதியில், பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாங்கல் போலீசார் விபத்து குறித்து விசாரணை!

error: Content is protected !!