News December 30, 2025

மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

image

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Similar News

News January 12, 2026

அன்னூர் அருகே பயங்கர விபத்து: அதிமுக நிர்வாகி பலி

image

அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் அப்பகுதியில் அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று காலை தனது பைக்கில் சோமனூர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

கோவை: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் லிங்கை<> கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இப்பணிக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (SHARE)

News January 12, 2026

உக்கடம்: மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!