News December 30, 2025

மேலூர்: வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், மேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை (டிச.30) திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை பூங்கா திறந்திருக்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 16, 2026

சூரியூர்: துணை முதல்வருக்கு ஜல்லிக்கட்டு காளை பரிசு

image

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் அவருக்கு நன்றி பாராட்டும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு காளையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

News January 15, 2026

திருச்சி: தோஷங்கள் தீர்க்கும் கோயில்!

image

திருச்சி, லால்குடி அடுத்த மாந்துறையில் ஆம்ரவனேசுவரர் கோயில் உள்ளது. சிவபெருமானின் முடி கண்டதாக பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றி தனது பாவத்தை போக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் வழிபட்டால் திருமண தடை, தோஷங்கள், சாபங்கள் மற்றும் நாம் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 15, 2026

திருச்சி: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!