News December 30, 2025
தூக்கிலிடும் வரை ஓயமாட்டேன்: உன்னாவ் பெண்

பாஜக Ex-MLA குல்தீப் சிங் செங்காரின் ஜாமினை நிறுத்தி வைத்த SC-ன் உத்தரவை வரவேற்பதாக <<18701955>>உன்னாவ் பாலியல்<<>> வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இன்று கூட MLA தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாகவும், அவரை தூக்கிலிடும் வரை நீதிக்கான தனது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் நீதி அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
கரூர்: மின் தடையா? உடனே அழைக்கவும்

கரூர் மாவட்டத்தில் மழை மற்றும் பல்வேறு காரணங்களுக்கு மின்தடை ஏற்படுகிறது. அவ்வாறு மின்தடை ஏற்படும்போது 1912 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 94458 50811 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். TNEB மொபைல் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க
News January 2, 2026
திராவிடம் தமிழனுக்கு எதிரானது அல்ல: திருமா

இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தல், சமத்துவத்திற்கும் சனாதனத்திற்கும் இடையிலானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் வைகோ நடைபயண தொடக்க விழாவில் பேசிய அவர், சனாதனத்தை வீழ்த்த CM மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை; அது தமிழ் மொழியை காக்கக் கூடியது என்றும் முழங்கியுள்ளார்.
News January 2, 2026
ஹேப்பி Introverts டே!

10 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் இருந்தால், அதில் நிச்சயம் ஒரு Introvert இருப்பான். அனைவரிடமும் எளிதில் பேச மாட்டார்கள். கூட்டத்தில் நிற்க கூச்சம், பலர் முன்னிலையில் சத்தமாக பேச தயக்கம்; கோபம், துக்கம் என அனைத்தையும் தங்களுக்குள் புதைத்து வைக்கும் ரகசியம் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களின் மெளனமே பல இடங்களில் இவர்களுக்கு பலமாக மாறிவிடுகிறது. உங்க கேங்கில் இருக்கும் Introvert யாரு.. கமெண்ட் பண்ணுங்க?


